Cauvery Issue -TN Karnataka [file image]
காவிரி நீர் சர்ச்சை : தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்பதில் கர்நாடகா இருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து கொண்டே தான் வருகிறது. இதற்கு ஒரு தீர்வை கொண்டுவரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டன. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கருத்தில் இருந்து கர்நாடகா ஒருபோதும் மாறியதில்லை.
இதன் காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில் பாதி அளவு தான் கர்நாடகா தந்தது. மேலும், இந்த ஆண்டும் கடந்த ஜூன் மாதம் வரை தமிழகத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது அதுவும் இல்லாமல் குறுவை பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
இது தொடர்பாக விவாதிக்க கடந்த மாத இறுதியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நிலுவைத் தண்ணீரை திறக்க தமிழகம் கோரிக்கை வைத்தது. ஆனால், தங்களுக்கு குடிநீர் பஞ்சம் வந்து விடும் என்னும் காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா நழுவியது. இதனால் வேறு வழியின்றி காவிரி ஆணையம் முடிவை பின்பு அறிவிப்பதாகக் கூறி கூட்டத்தை அப்போது நிறைவு செய்தது.
அதற்கு கர்நாடகாவும் பதில் வாதமாக, “எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது, எங்கள் அணைகளில் இருக்கும் நீரின் அளவு வழக்கமானதை விட 28% சதவிதம் குரைவாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை நாங்கள் திறந்துவிட்டு கொண்டு தான் வருகிறோம். இருப்பினும், கர்நாடகாவில் மழைப் பொழிவு சற்று குறைவு தான். இதனால், தண்ணீர் வரத்து போன்ற விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்”, என்று பதில் வாதம் முன்வைத்தனர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட காவிரி ஒழுங்காற்று குழு, “தமிழகத்திற்கு நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தியால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…