இந்தியாவில் லட்சத்தை கடந்த பாதிப்பு, உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.
இதுவரை 138,536 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 7,113 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஒரே நாளில் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 57,692 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் குணம் ஆகியவர்கள் தவிர்த்து 76,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025