Congress Leader Mallikarjun Kharge [File Image]
டெல்லி: 18வது மக்களவை கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று துவங்கிப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன் 25, 1975ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட எமெர்ஜென்சி பற்றி குறிப்பிட்டு பேசினார்.
பிரதமர் மோடி கூறுகையில், நாளை (ஜூன் 25) இந்திய ஜனநாயகத்தின் மீது கறைபடிந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நாள் அது. அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக்கப்பட்டது. இதனை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்ட நாள். ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்ட நாள் என்று எமர்ஜென்சியை கடுமையாக சாடினார்.
மேலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்ய மாட்டோம் என நாம் தீர்மானம் எடுப்போம். துடிப்பான ஜனநாயகத்தை கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற தீர்மானம் எடுப்போம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி குறிப்பிட்ட எமர்ஜென்சி விமர்சனத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்தார். இன்னும் எத்தனை காலம் எமர்ஜென்சி பற்றி ஆட்சி செய்ய போகிறார் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், எமர்ஜென்சியை 100 தடவைக்கு மேல் சொல்லி இருப்பார். இதைப் பற்றிப் பேசி எவ்வளவு காலம் ஆட்சி செய்ய வேண்டும்? அரசியலமைப்புச் சட்டத்தை உடைக்க மோடி முயன்றார். அதனால்தான் இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் இங்கு காந்தி சிலை முன்பு ஒன்றுகூடி போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…