எத்தனை கட்சிகள் பங்கேற்றாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாது..! அமித்ஷா பேச்சு..

AmitShah in Jammu

பாட்னா கூட்டத்தில் எத்தனை கட்சிகள் பங்கேற்றாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உட்பட 15-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், ஜம்முவில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அந்த உரையில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை குறிப்பிட்டு, பாட்னாவில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது என்று கூறினார்.

மேலும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து பாஜக மற்றும் மோடிக்கு சவால் விடுகின்றனர். இந்த எதிர்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எத்தனை கட்சிகள் பங்கேற்றாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமற்றது. பிரதமர் மோடி 2024 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்