எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள்! கொள்கையை காக்க ஒன்றுபடுவோம் – ராகுல் காந்தி பேட்டி!

நமக்குள் மன வேற்றுமை இருக்கலாம், ஆனால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் பாட்னாவில் ராகுல் காந்தி பேட்டி.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் கொள்கையை காக்க ஒன்றுபடுவோம்.
விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை அச்சுறுத்தியது பாஜக. இந்தியாவின் அடி தளமே தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பொதுவான செயல்திட்டத்தை வகுத்து வருகிறோம். நமக்குள் மன வேற்றுமை இருக்கலாம், ஆனால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியாவின் நிறுவனங்கள், அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்எஸ்எஸ் நெரித்து வருகின்றன. அவற்றை தடுக்கவும், முறியடிக்கவும் தான் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நிதிஷ் குமார் கூறியபடி விரைவில் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025