எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு! கூட்டம் முடிந்தவுடனேயே கிளம்பிய முதல்வர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து வந்த நிலையில், கூட்டம் முடிந்தவுடனே கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் முடிவடைந்த பிறகு, நிதிஷ் குமார், சரத்பவார், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அப்போது, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாஜகவை வீழ்த்த முதல் கூட்டத்தில் வியூகம் வகுத்துள்ளோம் அனைவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். இதனிடையே, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பாட்னாவில் ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து வந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் முடிந்தவுடனேயே கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது. கிளம்பிய காரணம் சரியாக தெரியவில்லை என்றும் இதுபோன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.