இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார்.
லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி லடாக் சென்று, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு, உரையாற்றினார்.
அப்போது அவர், “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்…” என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அந்த உரை, இந்தியளவில் பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழில் வெளியான கட்டுரையை மேற்காட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார்.
அந்த பதிவில், திருக்குறள் மிகவும் ஊக்கமளிக்கிறதாகவும், இது பணக்கார எண்ணங்கள், உன்னத இலட்சியங்கள் மற்றும் சிறந்த உந்துதல் ஆகியவற்றின் பொக்கிஷம் எனவும், மரியாதைக்குரிய திருவள்ளுவரின் வார்த்தைகள் நம்பிக்கையையும் பிரகாசத்தையும் பரப்பும் சக்தியைக் கொண்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் அதிகமான இளைஞர்கள் திருக்குறளை படிப்பார்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழிலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷம் என தெரிவித்த அவர், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. என தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயன்பெறுவார்கள் என நம்புகிறதாகவும் அந்த பதிவில் அவர் தெரிவித்தார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…