இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு;221 பேர் இறப்பு!

In the last one day, 12,729 people were newly infected with the corona; 221 people died!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 221 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,33,754 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,729 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 100 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,33,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 221 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,59,873 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,165 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,24,959 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,48,922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,07,70,46,116 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.