இன்று பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்சில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுனது. இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள், மற்ற விமானங்களில் இருப்பது போன்ற அனைத்து அம்சங்களும் பயிற்சி விமானங்களிலும் உள்ளது.
முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலையில் 5 விமானங்களும், நவம்பரில் 3 விமானங்களும், இந்தாண்டு ஜனவரியில் 3 விமானங்கள் இந்திய வந்து சேர்ந்தன. இந்நிலையில், 4-வது கட்டமாக இன்று மேலும் 3 போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள் அம்பாலாவில் உள்ள விமானப் படைத்தளத்திற்கு பிற்பகல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வரும் விமானங்களுடன் சேர்த்து விமானப் படையில் மொத்தமாக உள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…