இந்தியாவில் 206 நாட்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2.36 லட்சமாக குறைவு..!

India has the lowest number of people receiving corona treatment after 206 days ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 271 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,35,309 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,740 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,39,35,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 248 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,50,375 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 23,070 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,48,291 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,36,643 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை  93,99,15,323 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 79,12,202 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.