ஆப்கானிஸ்தானின் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

India is closely monitoring the situation in Afghanistan, said Indian Foreign Minister S. Jaisankar.

ஆப்கானிஸ்தானின் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்பொழுது தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் தற்பொழுது தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் உட்பட ஐநா சபையின் முக்கிய தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து பேசியிருந்தார்.

தற்பொழுதும் ஜெய் சங்கர் அவர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மற்ற நாடுகளை போலவே நாங்களும் ஆப்கானிஸ்தானின் நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கூறியுள்ளார். தற்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதிலும் தான் எங்கள் கவனம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.