நிர்பயா வழக்கில் தூக்கிலடப்பட உள்ள நான்கு பேரும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரிய நிர்பயா குற்றவாளிகளின் நேற்று நள்ளிரவு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடும் செய்தனர்.
இந்த குற்றவாளிகள் சார்பில் ஏபி சிங் மனு தாக்கல் செய்தார். 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஏபி சிங் நள்ளிரவில் உச்ச நீதிமன்ற பதிவாளரின் வீட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் அதிகாலை 2.40 மணிக்கு விசாரிக்க தொடங்கியது. குற்றவாளிகள் தரப்பில் ஏபி சிங் ஆஜராகி வாதாடினார். மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார்.
நிர்பயா குற்றவாளிளுக்கு 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் விசாரணை தொடங்கியது. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குற்றம் நடந்த சமயத்தில் 18 வயது நிறைவடையாதவர் என ஏபி சிங் வாதிட்டார்.மேலும் அவர், பள்ளி சான்றிதழ், வருகை பதிவேடுகளை நீதிமன்றத்தில் காட்டி வாதிட்டார். அப்போது நீதிபதி பூஷண் இந்த சான்றிதழ் எல்லாம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டவை தான் என்றார். கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக எந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். நீங்கள் இப்போது வைக்கும் வாதம் எல்லாம் ஏற்கனவே வாதிடப்பட்டவை தான் என்று அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்தார்.
இதையடுத்து வழக்கறிஞர் ஏபி சிங் குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாள் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி போட வேண்டும் என பவன்( குற்றவாளி) விரும்புகிறார் என்றார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் பவனின் கருணை மனு நிராகரிப்பு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியானது. இறுதியாக குற்றவாளிகளை பார்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க கோரி அவர்களது வழக்கறிஞர் ஏபி சிங் கேட்டார். அதை அனுமதிக்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தி கூறினார். ஆனால் இது மிகுந்த வலியான விஷயம் .
அத்துடன் அப்படி ஒரு வழக்கம் இல்லை என திகார் சிறை நிர்வாக ம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. அவர்கள் டெல்லி திகார் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு சற்று முன் மருத்துவப் பரிசோதனை நிறைவுபெற்றது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் அந்த குற்றவாளிகள் தற்போது தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் நான்கு பேரும் தற்போது தூக்கிலடப்பட்டதாக டெல்லி திகார் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…