டி.எஸ்.பி ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Prasanthi came to attend a function in Tirupati. Siam Sunder then saw the arrival of Jesse Prasanth and saluted him based on the mission.

பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தின் வருகையைக் கண்ட சியாம் சுந்தர் பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார்.

ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் சியாம் சுந்தர். இவரது மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி, 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிபெற்று, துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய்பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி.

இந்நிலையில், பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தின் வருகையைக் கண்ட சியாம் சுந்தர் பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார். இந்த சம்பவம் காண்போரை  நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தனது மகளுக்கு சல்யூட் அடித்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், தனக்கு இது பெருமையான விஷயம் என்றும், வீட்டில்தான் அப்பா-மகள் உறவு எல்லாம், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றும் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து ஜெஸ்ஸி பிரசாந்தி அவர்கள் கூறுகையில், தனக்கு இது பெருமையான நிகழ்வு என கூறியுள்ளார்.