சர்வதேச நிலவு தினம்..நிலவை நோக்கி அடுத்த படியில் சந்திராயன்-3..! – இஸ்ரோ

Chandrayaan-3 Mission

சந்திரயான் -3 விண்கலத்தை நான்காவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ தகவல்.

சந்திராயன்-3 விண்கலம் கடநத 18ம் தேதி 3-வது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட நிலையில், அதனை மேற்கொண்டு உயர்த்தும் பணியில் இன்று நான்காவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

கடந்த ஜூலை 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இஸ்ரோ தனது ட்விட்டரில், சந்திராயன்-3 விண்கலம் தற்போது நிலவுக்கு இன்னும் நெருக்கமாக சென்றுள்ளது என பதிவிட்டுள்ளது.

அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு ஒரு படி மேலே செலுத்துவதன் மூலம் இந்தியா 2023 சர்வதேச நிலவு தினத்தை கொண்டாடுகிறது. தற்பொழுது நான்காவது சுற்றுப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணி ஜூலை 25ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் சந்திராயன்-3 விண்கலம் மேலும் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்