நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் இலங்கை அதிபர் ரணில்…!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விளக்கினார். இதனை தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் 2 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை புரிகிறார். இதனையடுத்து, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் தொடர்பாக இருவரும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். இலங்கை அதிபராக பதவியேற்றபின் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.