சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கே கே எஸ் எஸ் ஆர் விடுவிப்பு

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை விடுவித்து விருதுநகர் முதன்மை நீதிமன்றம் உத்தரவு.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விருதுநகர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில், தற்போது அமைச்சர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முகம் ஆகியோரை விடுவித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விருதுநகர் முதன்மை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.