நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் வெற்றிபெற்றது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.நேற்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி கலந்துகொண்டனர்.
பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் முடிவு செய்தனர்.ஆனால் நேற்று ஜெகன் மோகன் ரெட்டியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
unknown nodeஇதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கலந்து கொண்டனர்.இதன் பின் ஜெகன் ஸ்டாலின் மற்றும் சந்திர சேகர ராவிற்கு மதிய விருந்து அளித்தார்.இதன் பின்னர் மோடி பதவி ஏற்புவிழாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் .ஆனால் மதிய உணவு முடிய நேரமானதாக கூறப்படுகிறது.இருந்தாலும் இதன் பின் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல இருவரும் முடிவு செய்தனர். அதேவேளையில் வெளிநாட்டு தலைவர்கள் வருகையையொட்டி டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு விமானம் இறங்க அனுமதி வழங்க முடியாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால் இருவரும் பிரதமரின் பதவி ஏற்பு விழாவிற்கு பங்கேற்க முடியாமல் போனது..