ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ .25 கோடி நிதிஉதவி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.
unknown nodeபல அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் பிரதமரின் நிதிக்கு ரூ .25 கோடி நிதிஉதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.