இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவால்கள், மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பின்னர் ஊரடங்குக்காலம் முடிந்ததும் மக்கள், மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடங்குவதில் தடுமாற்றம் இல்லாத நிலையை உருக்க குறைந்தபட்ச கொள்கையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் வரும் நாட்களில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேவையான மருந்துகள் மருத்துவ பொருட்கள் விநியோகத்தை பராமரிப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். இதையடுத்து மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுஷ் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வருக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் மற்றும்…
டெல்லி : ஜூலை 23 அன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து…
தூத்துக்குடி : மாவட்டத்தில், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025 ஜூலை 31 அன்று…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி…