பெங்களூரு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து கன்னட அமைப்பினர் போராட்டம்.!

இந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு சமீப காலமாக அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிப்பதாக அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்த்தவர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பின் பேரில், இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி சட்டைகளை அணிந்து பல திரைப்பட பிரபலங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் இந்த டி ஷர்ட்டுகளை வாங்குவதற்கான ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்று கர்நாடகா மாநிலத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிராக சமீபகாலமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தி திவாஸ் என்ற பெயரில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதை எதிர்த்து கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பினர் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடத்தினர்.
இதே போன்று பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பினர் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, ரயில் நிலைய வழிகாட்டியில் எழுதப்பட்டிருந்த இந்தி வாசகங்களை கற்களை கொண்டு அழித்து போராட்டம் நடத்தினர். இதில், அந்த அமைப்புகளை சேர்ந்த பெண்களும் திரளாக பங்கேற்று கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
North India never given a space to our Languages in their region’s, Then why should South has to accommodate Hindi? #HindiDiwas #StopHindiImposition pic.twitter.com/6YARHKXSjk
— Lokesh (@lokesh_169) September 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025