எரிபொருள் விலை குறைப்பை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்திற்கு எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் குறித்து பேச எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து சட்டசபைக்கு மாட்டு வண்டியில் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.
இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் பத்து நாளைக்கு நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸை சேர்ந்த சித்தராமையாவும், காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் சட்டமன்றத்திற்கு மாட்டு வண்டியில் வந்து எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸை குறை கூறுவது சாக்குப்போக்கு எனவும், ஒன்றரை லட்சம் கோடியாக இருந்த கடன் தற்பொழுது 24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றரை லட்சம் கோடி எங்கு உள்ளது? 24 லட்சம் கோடி எங்கு உள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…