மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அமிதேஷ் படாரியா இவர் வங்கி மேலாளராக பணியாற்றி இருந்துள்ளார். இவர் தனது மனைவியை கொலை செய்ய டிவி சீரியல் பார்த்து திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி போலீசில் சிக்கி கொண்டுள்ளார்.
இவர் டிவி சீரியல் பார்த்து ராஜஸ்தானில் இருந்து ஒரு நல்ல பாம்பை வாங்கி வந்து வைத்துவிட்டு, தன் மனைவி தூங்கும்போது தனது தந்தை, தங்கையின் உதவியுடன் மனைவியை கொன்றுள்ளான் அமிதேஷ் படாரியா.
பிறகு, அந்த நல்ல பாம்பை இறந்த தனது மனைவியின் உடலில் கடிக்க வைத்துவிட்டு, அந்த பாம்பை கொன்றுவிட்டு தன் மனைவி பாம்பு கடித்து இறந்துவிட்டார் என கூறி நாடகமாடியுள்ளான்.
இறந்த பெண்ணின் பிரேத பரிசோதனையில் அந்த பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார் , அப்பெண்னின் கணவரான அமிதேஷ் படாரியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது நடந்த உண்மையை கூறியுள்ளான். இதன் பேரில், அமிதேஷ் படாரியா, அவனது தந்தை, தங்கை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மனைவியை கொன்ற வழக்குமட்டுமல்லாமல் பாம்பை கொன்றதனால் வனவிலங்கு தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டான் அந்த கொலைகாரன்.
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…