கொரோனா நிவாரண நிதிக்காக எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தில் 60 சதவீதம் குறைப்பு : மகாராஷ்டிரா அரசு அதிரடி.!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகநாடுகள் முடங்கிப்போய் உள்ளன. நம் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 7 நாட்களை கடந்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் இயங்காமல் இந்திய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்தவும், கொரோனா நிவாரண நீதியாகவும் பலர் தங்களால் இயன்ற உதவிகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும் அம்மாநில நிதியமைச்சருமான அஜித் பவார் கூறுகையில் ‘மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி தலைவர்கள் போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சம்பளத்தில் 60 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இந்த பிடித்தம் முதல்வருக்கும் பொருந்தும்.’ என அறிவித்துள்ளார்.
‘ கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்’ அவர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025