மகாராஷ்டிராவில் ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் நகரைச் சேர்ந்த ஒருவர் ஆறு வயது மருமகளை (சகோதரி மகள்) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர். 42 வயதான அந்த நபரை நேற்று கைது செய்யப்பட்டதாக ஹில் லைன் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியுடன் விளையாடுவதாக கூறி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, சிறுமியின் மூத்த சகோதரர் தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அந்த நபர் மீது புகார் அளித்தனர். பின்னர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…