Rajkumar Ranjan Singh [Image Source : IIM Bodh Gaya]
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தல்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. சுற்றுலா பயணிகள், பிற மாநில மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததை அடுத்து, தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை, இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வன்முறையை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மேலும், மணிப்பூரில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 13,000 பொதுமக்கள் மீட்கப்பட்டு தற்போது பல்வேறு தற்காலிக தங்கும் இடங்களில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இம்பால் நகரம் மற்றும் பிற இடங்களில் இன்று சந்தைகள் மற்றும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…