ஆந்திராவில் கரையை கடந்தது மிக்ஜாம் புயல்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பாபட்லா கடற்கரையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான

Michaung Cyclone

ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே பாபட்லா கடற்கரையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, தீவிர புயலாக மிக்ஜாம் புயல் மாறியது.

இதனால், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழை பொழிந்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை விட்டு புயல் விலகியதால் மழை குறைந்தது. தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் பாபட்லா கடற்கரையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது.

மிக்ஜாம் புயல் : தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில் பலத்த மழை.. நீரில் முழ்கும் தாழ்வான பகுதிகள்!

தீவிர புயலாக இருந்த மிக்ஜாம் புயல் வலுவிழந்து கரையை கடந்தது. மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் விளக்கமளித்துள்ளது.

ஆந்திராவில் கரையை கடந்த புயல் அடுத்த 2 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் தொடர்ந்து வடக்கு நோக்கி நகரும் புயல் படிப்படியாக வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

நெல்லூர் தொடங்கி பிரகாசம் வரை ஆந்திராவில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழையால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.  ஆந்திர அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் சாலைகள், வயல் வெளிகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் மூழ்கி உள்ளன.