சிவில் சர்வீசஸ் தேர்வு 2019-ம் ஆண்டுக்கான முடிவுகளை ஆகஸ்ட் 4 -ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இணையதளத்தில் பலரின் வெற்றிக் கதைகளால் நிரம்பி வழிகிறது. இருப்பினும், ஒரு நபர் நெட்டிசனின் கண்களில் மாட்டிக்கொண்டார். அதுவும் ஒரு சிறந்த காரணத்திற்காக.
ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன், சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசை 93 இடத்தை பிடித்துள்ளார். இது உண்மையிலேயே சுவாரஸ்யமான விசயம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம், ஐஸ்வர்யாவும் பாராட்டப்பட்ட மாடல் மற்றும் கடந்த 2016 -ஆம் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராக இருந்தார். இதை மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
மேலும், ஐஸ்வர்யா 2015 – ம் அண்டு நடைபெற்ற டெல்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். உண்மையில், ஐஸ்வர்யாவின் கனவு சிவில் சேவைகளுக்கு வருவது தான். இந்த செய்தி வைரலாகி வந்த பிறகு, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உட்பட பல நெட்டிசின்களும் சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…