கொரோனாவால்நாடு முழுவதும் முடக்கப்பட்டது. இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது.
கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
மருத்துவர்களை தவிர மற்ற யாருக்கும் வெளியே வர ஊடரங்கின்போது அனுமதி இல்லை.
உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்
மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும்.
குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டியது முதற்கட்ட தேவையாக உள்ளது என மோடி கூறினார்.
முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொரு இந்தியனும் கடைபிடித்தார்கள்.
நாட்டில் முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் பல குடும்பங்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும்.
கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு தெரியாமலேயே கொரோனா வைரஸ் அவரை தொற்றக் கூடும் கவனமாக இருங்கள்.
காட்டுத்தீ போல கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு
கொரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம்
வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை .
இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.
அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்
அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி
காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள்.
24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள் என மோடி கூறினார்.
கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.
கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம் .
சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம்.