பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மூச்சு திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரக்யா சிங் தாக்கூர் போபாலைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4.15 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர் ரன்தீப் குலேரியாவின் மேற்பார்வையில் உள்ள ஒரு தனியார் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவருக்கு மூச்சு திணறல், மார்பு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதான எம்.பி.க்கு ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர் ஒருவர் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, டிசம்பர் 18 அன்று, கொரோனா அறிகுறிகளுடன் எய்ம்ஸில் பிரக்யா சிங் தாக்கூர் அனுமதிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை அடுத்த நாள் (டிசம்பர் 19) தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் திட்டமிடப்பட்டது. இந்த வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…