தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு – முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது!

தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது,இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும்,சாமியார் ஆலோசனைப்படி முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமனம் செய்து,அவருக்கு பல முறை சித்ரா ஊதிய உயர்வு வழங்கினார் என்றும் செபியால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதன்காரணமாக,சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் செபி தரப்பில் விதிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. அதன்பின்னர், சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கிடையில், சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த பிப்.25 ஆம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து,முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில்,சித்ராவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் வைத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து,சித்ராவை காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025