டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட NDA கூட்டணி எம்பிக்கள், பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், அமித்ஷா, ராஜ்நாத் சிங், குமாரசாமி என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பேசுகையில், 2024 தேர்தல் முடிவுகள் NDA கூட்டணிக்கு வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். இதனை தோல்வி போல சித்தரிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், நாங்கள் தோற்கவில்லை . தோற்க்கவும் மாட்டோம் என்பது நம் நாட்டு மக்களுக்குத் தெரியும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு NDA ஆட்சி தான். கடந்த 10 ஆண்டுகளாக இன்னும் 100ஐ கூட காங்கிரஸால் தொட முடியவில்லை. கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற மொத்த எம்பிகளை விட பாஜக அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
நாடாளுமன்ற விவாதங்களைத் தவறவிடாமல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடி NDA கூட்டணி ஆலோசனை கூட்ட நிகழ்வில் பேசிவருகிறார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…