டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை5.30மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு டிச., 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமன்றி அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு கிடந்தார். பின் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல சிகிச்சைகள் அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
unknown nodeஇக்கொடூர குற்றத்தை செய்த குற்றவாளிகள் 6 பேரில் ஒருவரான ராம்சிங், விசாரணையின்போது திகார் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில்இந்த சம்பவத்தில் தொடர்புடையசிறுவன்ஒருவனை சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் விடுதலை செய்யப்பட்டான். அவனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் பெயர் குறிப்பிடாத இடத்திற்கு பாதுகாப்பாக சிறுவன் அனுப்பிவைக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அந்த 4வரின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.இந்நிலையில் குற்றவாளிகள் 4பேரும் தங்களுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீதிமன்றம் விதித்த தூக்குகினைத் தண்டனையை நிறுத்த அவர்கள் பல முயற்சிகளை முயன்ற போதிலும் தூக்கினை தள்ளிப்போட மட்டுமே முடிந்தது. இதன் காரணமாக, 4வரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதிகள் 3முறைநிர்ணயிக்கப்பட்டும் தள்ளிப்போனது கடைசியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை முதல் தூக்கு வரை:
டிசம்பர் 12, 2012:
டெல்லி 23 வயது நிரம்பிய மருத்துவ மாணவியும், அவரது நண்பரும் சினிமா பார்க்க ஒரு தனியார் பேருந்தில் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பலால் அப்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு பேருந்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, நண்பருடன் சேர்ந்து அவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeடிசம்பர் 17, 2012:
இக்கொடூரப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்ராம் சிங்,அவரது சகோதரர்முகேஷ்,வினய் சர்மாமற்றும்பவன் குப்தாஆகியோரை டெல்லி காவல் துறையினர்டிசம்பர் 17, 2012 அன்றுஅடையாளம் கண்டனர்.
டிசம்பர் 21, 2012:
இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சிறுவனைக் கைது செய்துள்ளதாக டெல்லி காவல் துறையினர் தெரிவித்தனர். இதில் முக்கியக் குற்றவாளியானமுகேஷைபெண்ணின் நண்பர் அடையாளம் கண்டார்.
டிசம்பர் 22, 2012:
நாட்டையே உலுக்கிய இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 6வது நபரானஅக்ஷ்ய் தாக்குர்என்ற கொடூரன் பிகாரில் பிடிபட்டான்.
டிசம்பர் 26, 2012:
இந்நிலையில் டிச.,12லிருந்து டிச.,26 வரைக்கும் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் கடந்த 11 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
unknown nodeடிசம்பர் 29, 2012:
அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிங்கப்பூரில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் டிச.,29 2012 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு உயிரிழந்தார்.
பிப்ரவரி 2, 2013:
unknown nodeபாலியல் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட5 பேர் மீதும் விரைவு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தது.
மார்ச் 11, 2013:
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட பேருந்து ஒட்டுநர்ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
ஆகஸ்ட் 31, 2013:
unknown nodeஇந்த கொடூர குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறார் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 10, 2013:
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அக்ஷ்ய் சிங் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் முகேஷ்ஆகிய 4வரையும் டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.
செப்டம்பர் 13, 2013:
நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4வருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மார்ச் 13, 2014:
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மார்ச் 15, 2014:
இதனைத் தொடர்ந்து முகேஷ் மற்றும் பவன் குப்தாவின் மரண தண்டனையை நிறைவேற்ற மார்ச்31, 2014 வரை இடைக்காலத் தடை விதித்துஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பர் 20, 2015:
இவ்வழக்கில் தொடர்புடைய சிறுவன் சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து,3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலைசெய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற காரணத்தால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.
டிசம்பர் 21, 2015:
இவ் வழக்கில் தொடர்புடைய சிறுவன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துடெல்லி மகளிர் ஆணையம் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
மே 5, 2017:
நிர்பயா குற்றவாளிகள் 4வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையைஉச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. மரண தண்டனையை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டுமனு தள்ளுபடிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 15, 2017:
மரண தண்டனை விதிக்கப்பட்ட 4வருள்வினய் சர்மா மற்றும் பவண் குமார் குப்தாஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்சீராய்வு மனுவைதாக்கல் செய்தனர். இதற்கு முன்,முகேஷ் சிங்தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 12ஆம் தேதி நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9, 2018:
மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 பேரின் சீராய்வு மனுக்களையும்உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
டிசம்பர் 13, 2018:
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4வரது மரண தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
unknown nodeபிப்ரவரி 14, 2019:
4வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை நடைமுறையை துரிதப்படுத்துமாறு நிர்பயாவின் பெற்றோர்கள் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
unknown nodeஅக்டோபர் 30, 2019:
கருணை மனுவைத் தவிர அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டது என்று 4 குற்றவாளிகளிடம் திகார் சிறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 8, 2019:
குற்றவாளிகளுள் ஒருவரானவினய் சர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்முன் தனது கருணை மனுவைத் தாக்கல் செய்தார்.
டிசம்பர் 1, 2019:
வினய் சர்மாவின் இக் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரிக்கக் கோரி டெல்லி அரசு பரிந்துரைத்தது.
டிசம்பர் 6, 2019:
வினய் சர்மாவின்கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியது.
டிசம்பர் 10, 2019:
இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராகஅக்ஷ்ய் சிங்உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
டிசம்பர் 18, 2019:
மரண தண்டனைக்கு எதிராக அக்ஷ்ய் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
ஜனவரி 7, 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4வரையும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடடெல்லி நீதிமன்றம் வாரண்ட்பிறப்பித்தது.
ஜனவரி 17, 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரையும் பிப்., 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் எனடெல்லி நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துஉத்தரவிட்டது.
பிப்ரவரி 17, 2020:
unknown nodeநிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4வரையும்மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும்என்று டெல்லி நீதிமன்றம் மூன்றாவது முறையாக தேதியை நிர்ணயித்து உத்தரவிட்டது.
மார்ச் 4, 2020:
இந்நிலையில்வினய் குமார், அக்ஷ்ய் தாக்குர் மற்றும் முகேஷ் சிங்ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடைசியாகத் தாக்கல் செய்யப்பட்டபவன் குப்தாவின் கருணை மனுவையும் உடன் நிராகரித்தார்.
மார்ச் 5, 2020:
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4வரையும்மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட வேண்டும்என்று மீண்டும் டெல்லி நீதிமன்றம் புதிய தேதியை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.
மார்ச் 18, 2020:
குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை ஒட்டத்தை தூக்கிலிடும் ஊழியரானபவன் ஜல்லத்மேற்கொண்டார்.
மார்ச் 19, 2020:
நிர்பயா வழக்குகுற்றச் சம்பவம் நடைபெறும்போது தான் தில்லியிலேயே இல்லை என்றுமுகேஷ் சிங்மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கஉச்ச நீதிமன்றம் மறுத்ததுகுறிப்பிடத்தக்கது.
unknown nodeமார்ச் 20, 2020:
இந்நிலையில் பல சட்டப்போராட்டங்களுக்கு பின்னர்முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31)ஆகிய குற்றவாளிகள் நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலம் கடந்தாலும் நீதி ஒரு போதும் சாகாது ஆனால் இந்நீதி நிர்பயாவிற்கு விரைந்து கிடைத்திருக்கலாம் என்பதே சமானியர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.