பெங்களூருவில் பரபரப்பு.! கன்னட கொடிக்கு தீவைத்த வட இந்தியர்.! போலீசார் அதிரடி கைது.!

By

பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட கொடிக்கு தீ வைத்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரூ, பரங்கி பாளையத்தில் கன்னட கொடிக்குத் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இந்த நபர் வட இந்தியாவைச் சேர்ந்த அமிர்தேஷ் என  போலீசார் கண்டறிந்திருந்தனர். அமிர்தேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரவு 10 மணிக்கு கன்னட கோடிக்கு தீ வைத்து எரித்ததை பார்த்த மக்கள் அவரை தடுத்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்தனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், குடியிருப்பு பகுதியில் புகைபிடித்ததாக குற்றம் சாட்டி தன் மீதும் அவரது நண்பர் மீதும் நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகத் தான் இந்த செயலை செய்ததாக அம்ருதேஷ் கூறினார்.

Dinasuvadu Media @2023