இனி பாஜக ஆட்சி தான்.. கேரளாவிலும் தொடங்கிவிட்டோம்.! லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி.!

PM Modi - Congress MP Rahul Gandhi

டெல்லி: கடந்த 3 தேர்தல்களில் 100ஐ கூட தாண்டாத காங்கிரஸ் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இனி வரும் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும் என பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார்.

18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.  நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து உரையாற்றினார். நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்து இருந்தார் .

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி , குடியரசு தலைவர் உரைக்கு பதிலுரை அளித்து வருகிறார். ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து  வருகிறார் பிரதமர் மோடி. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கடும் அமளிக்கு நடுவிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், கடந்த 3 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 100ஐ கூட தொட முடியாமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர். எதிர்க்கட்சியினர் தாங்கள் வெற்றி பெற்றது போல நினைத்துக்கொள்கின்றனர்.

மத்தியில் மட்டுமல்ல மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சியை பிடித்துள்ளோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் ஆட்சியில் உள்ளோம். அருணாச்சல பிரதேசம் , ஆந்திரா , ஒடிசாவில் எங்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கேரளாவில் கூட ஒரு சீட் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் எங்கள் வெற்றி கணக்கை தொடங்கி விட்டோம். இனிவரும் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மகாராஷ்டிரா , ஹரியானா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையிலும் பிரதமர் மோடி தனது உரையை ஆற்றி வருகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்