உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது.
கொரோனா மீண்டும் அதிகரிப்பு:
ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.
கால அவகாசம் குறைவு?:
இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களாக குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்லுநர் குழு பரிந்துரை:
முன்னதாக,கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய பிறகு,இரண்டாவது தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் 12 – 16 வாரங்களாக உள்ள நிலையில்,அதனை 8 -12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்,ஒமைக்ரானை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிப்பதால் அதனையும் விரிவுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node