மும்பையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீருக்கு என நினைத்து சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரமேஷ் பவார் சானிடைசரை குடித்தபோது அருகில் இருந்தவர்கள் தடுத்தநிலையில் அவர் உடனடியாக சானிடைசரை துப்பினார். பிறகு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். இந்நிலையில், ஒருபுறம் சானிடைசர் பாட்டிலுக்கும், தண்ணீர் வித்தியாசம் தெரியாத அளவிற்கு எப்படி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
unknown nodeஒரு பதவியில் உள்ள அதிகாரியே தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மஹாராஷ்டிராவில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமில் சானிடைசரை சர்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.