காஷ்மீர் தேர்தல்.. பாஜகவுக்கு தைரியம் இருக்காது.! முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து.!

கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காஷ்மீரில் தேர்தல் நடத்த பாஜகவுக்கு தைரியம் இருக்காது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் மிக பெரிய வெற்றியை பதிவு செய்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரசும், 66 தொகுதிகளில் பாஜகவும் வெற்றிபெற்றன.
இந்த வெற்றி குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்ல்லா, கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காஷ்மீரில் பொது தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பாஜகவுக்கு இருக்காது என தெரிவித்தார். மேலும், நாடுமுழுவதும் அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு நல்ல செய்தி. நாடு முழுவதும் மக்கள் வகுப்பு வாத அரசியலை தவிர்த்து நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள் என நம்பிக்கை பிறந்துள்ளது எனவும் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர், லடாக் என 2 மாநிலங்காகளாக பிரித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல் கவர்னர் ஆட்சி முறை தான் தற்போது வரை நீடிக்கிறது .