டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ...!

With one more case of omega-3 infection being confirmed in Delhi, the total number of cases has risen to 33.

டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் கொரோனா வகையாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இது பரவியுள்ள நிலையில், முன்னதாக 32 பேர் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்பொழுதும் ஜிம்பாபே நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்த வெளிநாட்டினர் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.