கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் தொழில் நிறுவனங்கள் தவிர மற்றவை இயங்கவில்லை. இதனால் நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகும் சூழல் வந்துவிட்டது.
இதனை அடுத்து மத்திய அரசானது, சிறுசேமிப்பு மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டிவிகிதத்தை குறைப்பதக்க அறிவித்தது.
இந்த முடிவு குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறுசேமிப்பு மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டிவிகிதத்தை குறைக்கும் மத்திய அரசின் முடிவு தவறானது. இந்த ஆலோசனை முட்டாள்தனமானது. அதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். எனவும் வலியுறுத்தினார்.
unknown nodeunknown node