சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். My dear Children, Parents, and Teachers, the results of class X CBSE board examinations will […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது. இந்தியாவின் கொரோனா தொற்று 9 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு புதிய கொரோனா தொற்று மற்றும் 553 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 907,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,727 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 572,112 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார […]
எல்லை விவகாரம் குறித்து இந்தியா-சீன ராணுவ முத்த கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில் […]
ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள, பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் உள்ள உலகைளில் ஒரு உலை வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அங்கு 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் […]
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது செய்தனர் . இதைத்தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் ஸ்வப்னாவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது. ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு […]
டெல்லியில் மேலும் ஒரு பிளாஸ்மா சிகிச்சை வங்கியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3,411 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா […]
டெல்லியில் காலாவதியாகும் பீர்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்த சமயத்தில் தான் நாட்டில் உள்ள பள்ளிகள் ,கல்லூரிகள் ,திரையரங்கங்கள் ,வணிக வளாகங்கள் ,மதுபான கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 […]
சமீபத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடன் பேசிய உ.பி ஏ.டி.ஜி பிரசாந்த் குமார், கடந்த ஜூலை 3-ஆம் தேதி பிக்ரு கிராமத்தில் 8 போலீஸ்காரர்களைக் கொலை செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எங்கள் போலீஸ்காரர்களின் ஆயுதங்களையும் கொள்ளையடித்தனர் எனவும், இந்த வழக்கில் மொத்தம் 21 குற்றவாளிகள் உள்ளனர். அவர்களில் […]
லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை. கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில், இன்று மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமண்டர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள், சீன எல்லைக்குள் […]
டிக் டாக்குக்கு பதிலாக போலி முகவரியாக உருவாகியுள்ள டிக் டாக் ப்ரோ செயலியை எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா சைபர் செல். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த சில வாரங்களுக்கு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா. இதில் மக்களால் அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டது டிக் டாக் செயலி தான். இதனை இழந்து வருத்தத்தில் தவித்த டிக் டாக் பயனாளர்களை வைத்து மோசடி கும்பல் ஒன்று தனக்கு சாதகமான திட்டத்தை தீட்டியுள்ளதாம். அதாவது […]
1 கோடி மாணவர்களின் கல்வி வைரஸ் கேள்விக்குறி ஆக்கி விட்டதாக ஆய்வு அறிக்கைகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இது குறித்து வெளியான ஆய்வறிக்கை: கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முன்னோடியில்லாத கல்வி அவசரநிலையை” ஏற்படுத்தி உள்ளது. 9.7 மில்லியன் குழந்தைகள் பள்ளி மூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மீண்டும் வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் அவ்வாறான ஆபத்தில் உள்ளனர் என்றும் தி சேவ் தி சில்ட்ரன் எச்சரித்துள்ளது. மேலும் இது பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் யுனெஸ்கோவின் தரவை மேற்கோள் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை கடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,238,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 575,547 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 907,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,727 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 572,112 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட் பா.ஜக ஆதரவுடன் முதல்வராக திட்டமிட்டு காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி மேலிடம் முதல்வர் பதவி கொடுக்காததால், அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு, தொடர்ந்து பைலட் முயற்சித்து வருவதாகவும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து, பா.ஜ., தலைவர்களுடன் இது குறித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராஜஸ்தான் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகிறது.மேலும் பைலட் […]
பெங்களூருவில் இன்று இரவு 8 மணி முதல் ஜூலை 22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூரு நகர்ப்புற பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று […]
பெங்களூரு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்குப் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் Dharwad மற்றும் Dakshina கன்னட மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை-15 முதல் தர்வாத் ஒன்பது நாட்கள் ஊரடங்கு என்றும் தட்சிணா கன்னடத்தில் புதன்கிழமை இரவு முதல் ஒரு வாரம் ஊரடங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கமிஷனர்கள் பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் தலைமையில் நடைபெற்ற வீடியோ கூட்டத்தில் “தர்வாட் மாவட்ட மக்களின் கருத்தாக சில நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட […]
இன்று இந்தியா, சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதனை, இதுவரை சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள் குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை […]
முகக்கவசம் அணியாவிட்டால் 4 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும். இந்தியா முழுவது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில், பைரோசாபாத் மாவட்டத்தில், முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு, 4 மணி நேரம் விழிப்புணர்வு பாடம் நடத்தப்படும் என […]
30 தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அண்மையில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளவர்கள் உடன் முதல்வர் அலுவலகம் சம்பந்தம் உள்ளதாக கூறி, இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் பதவி விலக கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் […]
டெல்லியில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,344 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 91,312 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளதால், […]
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2.60 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அவளாக, இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,60,924 ஆக அதிகரித்துள்ளது. இன்று 193 […]