அவரது தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில், வெளியுறவு செயலர் ஜெய்சங்கரும் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் சிறையில் உள்ள 70 வயதுக்கு மேலான இந்தியர்கள் மற்றும் இந்தியப் பெண்களை விடுவிக்கும் படி அந்நாட்டு தூதரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசிய அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லையில் தாக்குதலை நிறுத்தும் வரை, அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடர் கிடையாது என்றும், தீவிரவாதமும், கிரிக்கெட்டும் […]
ஹவுராவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த இஷ்ரத் ஜஹான், தங்கள் கட்சியில் இணைந்து கொண்டதாக பா.ஜ.க.வின் மேற்குவங்க மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்துள்ளார். இவர் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்களுள் ஒருவரான இஷ்ரத் ஜஹான். இஷ்ரத் ஜஹானுக்கு பா.ஜ.க. சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இஷ்ரத் ஜஹானின் கணவர் துபாயில் இருந்தபடி செல்போன் வாயிலாக மூன்று முறை தலாக் கூறி திருமண பந்தத்தை முறித்துக் கொண்டதை […]
இந்தியப் பகுதிகள் சிலவற்றை உரிமை கொண்டாடும் சீனா வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் சாலை அமைக்கத் திட்டமிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததை அடுத்துச் சாலை அமைக்கும் திட்டத்தைச் சீன ராணுவத்தினர் கைவிட்டனர். இந்நிலையில் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரும், இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினரும் கடுமையாக நடந்துகொள்வதாகச் சீன ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய ராணுவம், பாங்கோங் சோ என்னுமிடத்தில் சீன ராணுவ வீரர்களே அச்சுறுத்தும் வகையில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் வைத்திருந்ததாகத் […]
அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் மக்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அஸ்ஸாம் மாநிலமானது பெயர்கள் சரிபார்க்கும் நோக்கில் பெயர் சரிபார்க்கும் திட்டத்தை துவங்கியுள்ள்ளது. இதில் முதற்கட்டமாக டார்ரங் மாவட்டத்தில் உள்ள உள்ள NRC சேவா கேந்திரா மக்கள் குடியுரிமை தேசிய பதிவில் 3 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் நாளில் 1.9 கோடி மக்களின் பெயர் சரிபார்க்கப்பட்டுவருகிறது. source : www.dinasuvadu.com
தற்போது உலகம்மெங்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உருவாகிறது. ஆதலால் ஒரு மாநிலத்திலிருந்து ஐநூறு மாநிலத்திற்கு முதலமைச்சர் செல்லும் முன் அந்த மாநிலத்தின் முதல்வருக்கு தகவல் சொல்லி பாதுகாப்பு அனுமதி பெற்ற பிறகே மற்றொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.’ என குறிப்பிடபட்டுள்ளது. […]
இன்று கொல்கத்தாவில் பேராசிரியர் எஸ்.என்போஸின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவரது நினைவாக நடைபெறும் மாநாட்டில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரென்ஸ் மூலம் திரைச்சீலையை திறந்து வைத்து உரையாற்றினார்.
புத்தாண்டு தினத்தில் வடமாநிலங்கள் மிக மோசமான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. டெல்லியின் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக சற்று தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்தது. இதனால், தொடக்கத்தில் அங்கு சுமார் 350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் […]
டெல்லியில் கடும்பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பத்திபடைந்துள்ளனர். ஏற்கனவே அங்கு காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடும்ம்பணி காரணமாக தரைவழி போக்குவரத்து மட்டுமல்லாது, வான்வழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமானங்கள் 5உம், வெளியூர் விமானங்கள் 7-உம் ரத்து செய்யப்பட்டுள்ளன. source : www.dinasuvadu.com
அசாம்: 1.9 கோடி விண்ணப்பதாரர்களின் பெயரை உள்ளடக்கிய குடிமக்கள் தேசிய பதிவேட்டின் முதல் வரைவு இன்று துவங்கியது. இது அசாமில் சட்டவிரோதமான தங்கியிருக்கும் குடிமக்களை கண்டுபிடிப்பதற்கு இத்தகைய குடிமக்கள் தேசிய பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேராவில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டம் நவ்சேரா மற்றும் பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1 மணி முதல் இன்று காலை வரை தாக்குதல் நீடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்சிர் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக […]
இன்று சபரிமலை ஜயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடையானது வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
குறைந்த பட்ச வைப்புத் தொகையை (Minimum balance Deposit) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது. ஆனால் பணக்கார நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத வாராக்கடன் தொகைகளை இதுபோல ஏழை மற்றும் குறைந்த வருவாய்க்காரர்களிடமிருந்து வசூலித்து பா.ஜ.க. அரசு நிதிச் சுமையை சமாளிக்கிறது.
ஆதார் பதிவில் விதிமுறைகளை மீறியதால் 50,000 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை மின்னணுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் இன்று காலை புது டெல்லியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார் . மேலும் அவர் டிசம்பர் 1 2017 வரை 71.24 கோடி மொபைல் எண்கள்,14.63 கோடி நிரந்தர வங்கி கணக்கு எண்கள் மற்றும் 82 கோடி வங்கி கணக்குகள் ஆதார் உடன் இணைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
உத்திர பிரதேச பா.ஜ.க. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பை (Census) நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிக்காக ரூபாய் 7.86 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பசுக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப் படவுள்ளன.
டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “டெல்லியில் வசிக்கும் அனைவரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். மனிதர்கள் நீண்ட வாழ்க்கை வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைவரும் பொது […]
நாட்டின் தலைநகர் டெல்லிக்கே போய் போராடியும் இந்திய அரசோ அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை விடுத்து தமிழகத்துக்கே திரும்பி விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா அரசு விவசாயிகள் நலனுக்காக அவர்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. source : www.dinasuvadu.com
அரசு அலுவலகம் என்றாலே ஊழியர்கள் தாமதமாக தான் வருவார்கள் என்ற எண்ணத்தை ஒரிசா மாநிலம் உடைத்துள்ளது. மேலும் அலுவலகம் தொடங்கும் முன்னதாக 9.30 மணிக்கே வர முதலமைச்சர் சோனவால் கூறினார். இதுபற்றி ஒரிசா முதலமைச்சர் சோனவால் கூறும்போது, ‘இந்தியாவிலேயே முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் ஒரிசா தான் அதலால் அரசு ஊழியர்கள் 10 மணிக்கு முன்னதாக 9.30 மணிக்கே வந்து விட வேண்டும் மாலை அலுவலகம் முடியும் நேரம் வழக்கம் போல் 5 மணிதான் அதில் மாற்றமில்லை. […]
வங்கிகளில் வாராக் கடன் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.இந்த புள்ளி விபரத்தை CARE Rating என்கிற சர்வ தேச பொருளாதார ஆய்வுக்கு குழு வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் எட்டாவது இடத்தில இருந்த இந்தியா மத்தியில் பா.ஜ. க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவில் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ள […]
ஆந்திர பிரதேச அரசு வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்தவிருக்கும் திட்டத்தில் 149 ருபாய் கட்டணத்தில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள், வரம்பு இல்லாத தோலை பேசி அழைப்புகள் மற்றும் பிராட் பேண்ட், வை பை முதலான சேவைகள் அனைத்தையும் பெறலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்விநேரத்தின் போது மின்சாரம் குறித்து கேட்கப்பட்டது, அப்போது அதற்க்கு பதிலளித்த மின்சார மந்திரி ஆர்கே சிங் கூறும்போது, ‘இன்னும் மின்சார விநியோகம் கிடைக்கப்பெறாமல் உள்ள 1694 இல்லங்களுக்கு டிசம்பர் 2018-க்குள் மின் விநியோகம் வழங்கப்படும். இந்த வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வரும் மார்ச் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்படும். மார்ச் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தடையில்லா மின்சாரம் வழங்க தவறும் பட்சத்தில், மின்விநியோக […]