இந்தியா

கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் ரயில் சேவைகள் பாதிப்பு! பயணிகள் கடும் அவதி…….

டெல்லியில்  கடும் பனிமூட்டம் நிலவுவதால் சென்னைக்கு ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதின் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமையன்று புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய நிலையில், பனி மூட்டம் காரணமாக நள்ளிரவு ஒரு மணியளவில் வந்தடைந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி செல்லும் பயணிகள் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது செய்தியாளரிடம் பேசிய […]

#Weather 3 Min Read
Default Image

இன்று வெளியாகிறது பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் தண்டனை விவரம்!

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிக்க உள்ளது.இதனால் அவர் குறித்து இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 89 கோடி ரூபாய் ஊழல் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 16 பேரை குற்றவாளிகள் என கடந்த 23ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.இதையடுத்து, ராஞ்சியின் பீர்சா முண்டா சிறையில் லாலு அடைக்கப்பட்டார். அதிகபட்சமாக லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக  […]

#Politics 2 Min Read
Default Image

இன்று மாநிலங்களவையில் தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா!

முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. முத்தலாக் வழக்கத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோ தா’ மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப் பட்டுள்ளது. இந்த மசோதா மாநிலங்க ளவையில் நேற்று தாக்கல் செய்யப்படும் என்று அவை அலுவல் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் காங்கிரஸ் […]

india 4 Min Read
Default Image

சீனாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம்….. இந்தியாவில் புத்தாண்டில் மட்டும் 69,070 குழந்தைகள் பிறப்பு!

2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும், இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்துள்ளன. சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400 எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன. உலக நாடுகளில் பிறந்த […]

beating china 4 Min Read
Default Image

டிராக்டர் விவசாய பட்டியலில் இருந்து நீக்கப்படாது !நிதின் கட்கரி விளக்கம் ….

விவசாய வாகனப் பிரிவில் இருந்து டிராக்டர் நீக்கப்படாது என  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்.பி. திருச்சி சிவா ஒப்படைத்தபோது அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதம் தான் டிராக்டர் விவசாய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது .இதனால் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் தற்போது அதை சேர்ப்பதாக நிதின் தெரிவித்துள்ளார் […]

#DMK 2 Min Read
Default Image

முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு. டெல்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு கால சிறைத்தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.இவர்  நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.எனவே ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பதாக அறிவிப்பு … source: www.dinasuvadu.com

#Delhi 2 Min Read
Default Image

ஜம்முவில் நடந்த துப்பாக்கி சூட்டில் வீரமரணம் அடைந்த ஜாகிர் சிங்க் உடல் பஞ்சாப்பில் அடக்கம்!

ஜம்மு காஷ்மீரில் நடந்த 37மணி நேர துப்பாக்கி சூட்டில் ஐந்து சி.ஆர்.பீ.எப். வீரர்கள் பலியாகினர் .அதில் ஒருவர் தான் செபாய் ஜாகிர் சிங்க்.அவர் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானார் .இதையடுத்து அவரது உடல் சொந்த மாநிலமான பஞ்சாப்பிற்கு கொண்டு வரப்பட்டது .பின்னர் அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டதது. source: www.dinasuvadu.com  

#Pakistan 1 Min Read
Default Image

காஷ்மீரில் 37 மணி நேரமாக நடந்த என்கவுன்டர்! 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் …..

  காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் மீது கடந்த ஞாயிறன்று இரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.உடனே  சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப்.படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது குறித்து […]

#Pakistan 3 Min Read
Default Image

மத்திய பிரதேஷத்தில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களை சுட்டு கொலை!

மத்திய பிரதேஷ மாநிலம்  சத்னா என்னும் இடத்தில்  கிராமவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு. சத்னா கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர்  வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது .இதனால் அவர்கள்  மீது உள்ள தனிப்பட்ட போட்டி காரணமாக அவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருந்துள்ளார் .இந்த போட்டியின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருந்து இருவர் மீது துப்பாக்கியால்  சுட்டுள்ளார்.இதனால் அந்த இருவரும் துப்பாக்கியால் உயிரிழந்தனர் .துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்   … source: […]

#MadhyaPradesh 2 Min Read
Default Image

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான வாய்ப்பே இல்லை!

“தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன்படுத்தவும், சுங்கக்கட்டணம் என்பது அவசியமான ஒன்றாகும். உலகம் முழுவதுமே, தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் மும்பையில் இருந்து புனே செல்வதற்கு, கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, […]

#BJP 3 Min Read
Default Image

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம்!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் ராஜிந்தர் நெய்ன்.இவர்  காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.இதில்  சி.ஆர்.பி.எப். வீரர் ராஜிந்தர் நெய்ன் என்பவரின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் சுருவிற்கு கொண்டு வரப்பட்டது.இறுதி சடங்கிற்கு பின்னர் அவரது உடல் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். source: www.dinasuvadu.com  

#Pulwama 2 Min Read
Default Image

தூய்மைஇந்தியா திட்டம்-ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு

  தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து, பிரபலங்களை தூதர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘‘நாடு முழுவதும் தூய்மைப்பணி குறித்த ஆய்வு ஜனவரி 4ல் தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சுமார் 4 ஆயிரம் நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்’’என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பைகளின் அளவும் அதிகரித்துள்ளது. மேலும் கழிப்பறைகளும் […]

#CentralGovernment 3 Min Read
Default Image

டெல்லி,ராஜஸ்தான்,பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கடும் பனிமூட்டம்!விமானம்,ரயில் சேவை பாதிப்பு…..

டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மூடுபனி காணப்படுகிறது. எதிரில் இருக்கும் பொருள்கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால், நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏராளமான வெளியூர் ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகையும் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்றும், கடும் பனிமூட்டத்தால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 20 […]

#Delhi 2 Min Read
Default Image

புனேவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட மதவாத சக்திகள்…!

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள ” *பீமா கோரேகான்”* போர் நினைவுசின்னம் 200வது ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி போன்ற தலித் தலைவர்கள் பங்கேற்று பாஜக தலைவர்களின் அரசியலமைப்பு மாற்றம் குறித்த கருத்துக்களை எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இதனை பொறுத்துகொள்ள முடியாத ஆளும் மதவாத சக்திகள் இன்று 01-01-2018 வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு […]

#Maharashtra 2 Min Read
Default Image

ஆந்திர மாநிலம் அருகே போலீசார் மீது செம்மரக்கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல்!

ஆந்திர மாநிலம்  திருப்பதி அருகே செம்மரக்கடத்தல்காரர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறி, வானத்தை நோக்கி ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 36 செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை பின்புறம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மலைபாதை வழியாக செம்மரங்களை வெட்டி வந்த கடத்தல்காரர்களை போலீசார் சுற்றி வளைக்க முயற்சி செய்தனர். […]

#Police 3 Min Read
Default Image

இன்று மாநிலங்களவையில் தாக்கலாகிறது உடனடி முத்தலாக் தடை மசோதா!

உடனடி முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதால், வலுவான எதிர்ப்பை தெரிவிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.இந்த சட்டம் தடைபட்டால் போராட்டம் நடத்த அனைத்து இந்திய முஸ்லிம் கட்சியினர் தெரிவித்துள்ளனர் .இதற்க்கு எதிர்ப்பு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர் … source: www.dinasuvadu.com

#BJP 1 Min Read
Default Image

இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம்!

இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்காக மத்திய அரசு கொண்டு வர உள்ள மசோதா, நவீன சிகிச்சை முறைகளை 6 மாத பயிற்சிக்குப் பின் ஆங்கில மருத்துவர்கள் மட்டுமன்றி அனைத்து வழிமுறை மருத்துவர்களும் மேற்கொள்ள வழிவகுப்பதாக இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக கிளை தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தில் மருத்துவத் துறை சாராதவர்களையும் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.இந்த […]

#Strike 2 Min Read
Default Image

புனே அருகே இரு பிரிவினரிடையே மோதலால் வன்முறை!

கோரேகான்  என்ற இடத்தில் 1818-ஆம் ஆண்டு அரங்கேறிய ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் 200-ம் ஆண்டு நினைவுதினம் திங்களன்று நடைபெற்றது.. நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது, பேஷ்வா இனத்தவருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பும் கற்களை வீசிக் கொண்டதால், வன்முறையில் வெடித்தது. வாகனங்களும், வீடுகளும் தீக்கிரையாகின. பதற்றம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வன்முறை குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா […]

#Attack 2 Min Read
Default Image

29வது ஆண்டு விஜயவாடா புத்தக பெருவிழாவை முதல்வர் மற்றும் துணைகுடியரசு தலைவர் துவக்கி வைத்தார்கள்…!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில்ஆண்டுதோரும் நடைபெற்று வரும் விஜயவாடா புத்தக விழாவின் 29வது பதிப்பு ஆண்டு பெருவிழாவை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடன் சேர்ந்து இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு துவக்கி வைத்தார்.  

Andhra Pradesh 1 Min Read
Default Image

கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ. வங்கி

  வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகித்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு […]

#BJP 2 Min Read
Default Image