வரும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா மாநிலம் கொல்லம் அதிவிரைவு சாலை (bypass) இரண்டாம் கட்ட பணி நிறைவு செய்யப்படும் எனவும் இதுவரையில் சுமார் 72% வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன.13 கி.மீ. நீளமான பைபாஸ் சுமார் ₨.352 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இந்த சாலையை மாநில அரசு மற்றும் மத்திய அரசால் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார் கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன். இதனை அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் […]
சபரி மலை ஐயப்பன் கோவிலின் பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்ற அவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு […]
உத்தரகண்ட் மாநிலத்தில் பன்சாசா மாவட்டம் லால்கோதி பகுதியில் உள்ள ஷார்தா ஆற்றில் கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயரிழந்தவர்களின் உடல்களையும், காரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றன.
விமானத்தில் நாம் ஏறியவுடன் நமது செல்போனை அணைத்து வைத்து விட வேண்டும் இல்லையென்றால் சிம்-ஐ ஆஃப் செய்யவேண்டும். இனி அப்படி இருக்காது. ஏனெனில் விமானத்தில் இனி ஃப்ரீ வைஃபை வழங்கலாம் என மத்திய அரசு விமானங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இனி விமானத்தில் செல்லும்போது பேஸ்புக், வாட்ஸ்அப், யூ-டியுப் என பயண நேரத்தை செலவிடலாம். ஆனால், செல்போன் அழைப்புகளுக்கு மட்டும் வழக்கம் போல் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் கொடுக்கப்படும் ஃப்ரீ வைஃபை மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம். source […]
வடகொரிய தற்போது பல்வேறு விதமான அணு ஆயுத சோதனைகள் நடத்திவருவதால் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை வாங்கியுள்ள நிலையில் தற்போது அதற்க்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார் . வட கொரியா கடுமையான அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது ஆனால் தற்போது அந்த நாடு அசுர வளர்ச்சியடைந்துள்ளது. வட கொரியா அமெரிக்காவின் அழுத்தத்தால் மட்டுமே வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது’ என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கோழிக்கோட்டில் மாவட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். source: www.dinasuvadu.com
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 50 வயதான தலைமைக் காவலர் ஆர்.பி. ஹஸ்ரா என்பவர் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் நிலைகளை குறி வைத்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் படையினர் 12 முதல் 15 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராமவ்தார், நேற்று […]
மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி சக பெண் விமானியை கன்னத்தில் அறைந்ததால் அந்தப் பெண் விமானி கண்ணீருடன் காக்பிட் அறையை விட்டு வெளியேறினார். கடந்த ஒன்றாம் தேதி, அந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் இப்பிரச்சனை அப்போதைக்கு முடிவுக்கு வந்து விமானம் மும்பை வந்து சேர்ந்தது. இந்நிலையில், உயரதிகாரிகளிடம் இருவரும் முறையிட்டதால், இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…இதனால் பயணிகள் கடும் […]
டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு. அந்த சந்திப்பின் போது சுற்றுச்சூழல் தடையில்லா சான்று இல்லாமல் இயங்கும் குவாரிகளை மூடும் உத்தரவை பரிசீலிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஆபரேஷன்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் ஜிகிஷா கோஷ்(28). தெற்கு டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் வசித்துவந்த இவர், 2009-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பணி முடிந்து அலுவலக வாகனத்தில் வீடு திரும்பிய சமயத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹரியானாவின் சூரஜ்கண்ட் அருகே ஜிகிஷாவின் உடல் கண் டெடுக்கப்பட்டது. இவ்வழக்கில், பல்ஜீத் சிங் மாலிக், அமித் சுக்லா மற்றும் ரவி […]
ஐநாவில் இந்தியை அலுவலக மொழியாக்குவது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், 22 நாடுகளில் பேசப்படும் அரபி மொழியே ஐநாவில் அலுவல் மொழியாக ஆக்கப்படாத நிலையில், இந்தியாவில் மட்டுமே பேசப்படும் இந்தியை ஆக்க முயற்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தையோ, மேற்கு வங்கத்தையோ சேர்ந்த ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவோ, பிரதமராகவோ பதவியேற்கும் நிலையில், அவரும் ஐநாவில் […]
அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லயில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் . அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் தொடர்கின்றன.அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாவட்டத்தில் மரோல் பகுதியில் உள்ள மைமூன் என்ற அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கி சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.பின்னர் தீயணைப்பு படை வீரர்களால் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தின் காரணமாக கூலி தொழிலாளர்கள் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில் ஊடுருவ முயன்ற ஒருவரை பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். எல்லை பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை சுட்டு கொன்றனர். ஊடுருவ முயன்ற மர்ம ஆசாமி(தீவிரவாதி) குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அந்த பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது . source: www.dinasuvadu.com
உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் கல்வித்துறை சார்பில் பாலகங்காதர திலக் விழா மீரட்டில் கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பாலகங்காதர திலக் எழுதிய பகவத்கீதையை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அலியாகான் என்கிற முஸ்லீம் என்கிற 15 வயது முஸ்லீம் மாணவி கலந்து கொண்டு கிருஸ்னர் வேடம் அணிந்து 2 வது பரிசை பெற்றார். இந்த போட்டியில் கலந்து கொண்டதற்காக முஸ்லீம் உலமா அமைப்பு மதத்தடை விதித்துள்ளது. மேலும், […]
டெல்லியில் மாநிலங்கலவை தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் டெல்லியில் ஆட்சில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் ராஜினாமா செய்யவில்லை எனவும், டெல்லி மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள அந்த 3 தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக சஞ்சய் சிங், சுஷில் குப்தா, நவீன் குப்தா ஆகியோர் போட்டியிடுகின்றனர். source : www.dinasuvadu.com
பாகிஸ்தான் சிறைகளில் 399 மீனவர்கள் உட்பட 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு நாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.இதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளுக்கு இடையே இந்தப் பட்டியல் பரிமாறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அரசு சார்பில் இந்திய வெளியுறவுத் […]
மாவோயிஸ்டுகளுக்கு ஒரு நாளும் மன்னிப்பே கிடையாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு திட்டவட்டம் . ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. வன்முறையை கைவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ள தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம் ஏதும் உள்ளதா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு […]
பெண்களுக்காக அமைக்கபடும் புதிய திட்டங்களையும் மற்றும் முன்னெடுப்புகளையும் நேரடியாக அவர்களிடம் சேர்க்க ஒரு இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். இதை செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் பெண்கள் நலம்பெறும் வகையிலான முக்கியத் தகவல்கள் அடங்கிய சுமார் 350 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் அவர்களின் வயது மாநிலம் மற்றும் தேவைக்கேற்ப உதவிகள் வழங்கப்படுகின்றது என்பது கூற வேண்டியதாகும்.
கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக, 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருந்தது. இதற்காக, பாட்னா பிர்ஸா முண்டா சிறையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் […]