வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலொழிய வீடு திரும்ப மாட்டோம் என உறுதியாக இருக்கும் விவசாயிகள், இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 8 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது. இந்நிலையில் இன்று 9-வது […]
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ்குமார் தம்பதியினருக்கு பிறந்த 20 மாத குழந்தையான தனிஸ்ஷாவின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் என்றால் அது பெரியவர்கள் செய்து தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் தற்போது 20 மாத குழந்தை ஒன்று தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ்குமார் தம்பதியினருக்கு பிறந்த 20 மாத குழந்தையான தனிஸ்ஷா […]
பயனர்களின் பாதுகாப்பு கொள்கையை மீறிய தனிநபர் கடன் கொடுக்கும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துள்ளது போல, அதே அளவு எளிதாக மக்களின் உயிர்களும் பறிக்கப்படுகிறது. அந்த வகையில், அண்மைக் நாட்களாக இந்தியாவில் டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYC-ஐ மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் விரைவாக கடன் கொடுக்கும் பழக்க வழக்கம் அதிகரித்துள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் கடன் வாங்கியவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்கள் […]
டெல்லி :இங்கிலாந்திலிருந்து டெல்லி வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் உள்ளது .இந்த உத்தரவானது வரும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் 7 நாட்கள் அரசு கண்காணிப்பு மையங்களிலும் ,அடுத்த ஏழு நாட்கள் வீட்டுத் தனிமையிலையும் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Delhi government extends till January 31 its order pertaining to 14-day quarantine for passengers arriving in Delhi from […]
முதல் கட்டமாக கேரளா மாநிலத்திற்கு 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை மந்திரி கேகே சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸை ஒழிக்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு ஆலோசனைக்கு பின், வருகின்ற 16ம் தேதி முதல் நாடு முழுவதிலும் தடுப்பூசி போடக்கூடிய பணிகள் துவங்கப்படுகிறது. தற்பொழுது புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு […]
83 தேஜாஸ் போர் விமானங்கள் 48 ஆயிரம் கோடி ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 83 தேஜாஸ் போர் விமானங்களை ரூ .48,000 கோடிக்கு வாங்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு இந்த முடிவை எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், விமானப்படையை பலப்படுத்த இந்த […]
பாட்னாவில் உள்ள இண்டிகோவின் விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங் வயது 42,செவ்வாய்க்கிழமை மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்களால் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் நெருங்கிய தூரத்திலிருந்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ,இதில் அவரது மார்பில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ,இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் ,சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிட் -19 தடுப்பூசியான கோவிஷீல்ட் மும்பைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.மும்பை மாநகராட்சியின் (பி.எம்.சி) சிறப்பு வாகனத்தில் புனேவிலிருந்து சாலை வழியாக இந்த தடுப்பூசி கொண்டு […]
பிரதமர் மோடி தலைமையில் காணொளி மூலம் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது.கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி இன்று அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாட்களாக விசாரணை நடத்தியது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா…? என மத்திய […]
இந்தியா மாற்று சீனாவுக்கு இடையே எல்லை பிரச்சனை ஒரு முடிவில்லாமல் நீண்டுக் கொண்டு தான் செல்கிறது.இதில் லடாக் பிரச்சனை இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில்,இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே கூறுகையில் செவ்வாயன்று, “பாகிஸ்தானும் சீனாவும் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஒரு கூட்டு அச்சுறுத்தலை அளித்து வருகிறது.இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். மேலும் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறிய ஜெனரல் நாரவனே, ” கிழக்கு லடாக்கில் உள்ள பகுதிகள் எங்களது […]
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. விளைபொருட்களான குறைந்தபட்ச ஆதார விலை அமலில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கான மொத்த செலவும் மத்திய அரசே ஏற்க வேண்டும். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த 10 நாட்களில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாதத்திற்குள் இறுதி […]
16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நாடு முழுவதும் வரும் 16-ஆம் தேதி முதல் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் 16.5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளதாக […]
டெல்லி: சதர்பூரில் ஐ.டி.பி.பி நடத்தும் உலகின் மிகப்பெரிய கொரோனா பராமரிப்பு வசதியான டெல்லியின் சர்தார் படேல் கொரோனா மையம் வெளிநாட்டினருக்கும் வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கும் சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவர்கள் உட்பட கிட்டத்தட்ட 600 ஊழியர்களுடன் சுமார் 60 நோயாளிகள் தற்போது இங்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, இந்த மையம் டெல்லியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதித்து வந்தது. இதில் ஆன்லைன் சேர்க்கை மற்றும் […]
நாடு முழுவதும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி இன்று அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தியது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா…? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொளி […]
மகாராஷ்டிராவில் ஓடும் சொகுசு பேருந்தில் ஓட்டுநர் உதவியாளரால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். புனேவில் உள்ள ஒரு பெண் நாக்பூரிலிருந்து நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது நகரும் தனியார் சொகுசு பேருந்துக்குள் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், கிளீனர் நகரும் பேருந்தில் தன்னை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புனேவின் ரஞ்சங்கான் பொலிஸாருக்கு அந்த பெண் புகார் அளித்தார், ஆனால் இந்த சம்பவம் வாஷிம் மாவட்டத்தில் நடந்த நிலையில், புனே காவல்துறை […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய அரசு தரப்பில் […]
ஜனநாயகத்தை காப்பாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இன்று சுவாமி விவேகானந்தாவின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, காலம் செல்ல செல்ல நாடு சுதந்திரமடைந்து வருவதை இன்றும் நாம் காண்கிறோம். சுவாமி விவேகானந்தரின் செல்வாக்கு இன்னும் அப்படியே உள்ளது. பொது சேவை பற்றிய அவரது எண்ணங்கள் இன்று […]
மஹாராஷ்டிராவில் குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடையை நீட்டிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் என்பது யூனியன் ஆஃப் இந்தியாவின் களத்திற்குள் உள்ளது. இது அரசால் தடை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் குட்கா மற்றும் பான் மசாலா மீதான நடைமுறையில் உள்ள தடையை அமல்படுத்துவதில் இருந்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) கட்டுப்படுத்தப்படும் என்று இது அர்த்தப்படுத்தாது என்று மும்பை உயர்நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது. […]
3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. […]