மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் […]
கொரோனா தடுப்பூசிகளை இந்தியா எப்போது ஏற்றுமதி செய்யும் என வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்குள் நாட்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து அரசாங்கத்திற்கு அதிக தெளிவு இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர் இன்று தெரிவித்தார். ஒரு நிகழ்வில், வெளிநாட்டு மக்களுக்கு அவர்களின் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பான கவலைகளை இந்தியா புரிந்து கொண்டதாக கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசிகள் மற்றும் பொதுவான மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கொரோனா […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியாது என மத்திய அரசு கூறி நிலையில்,இன்று நடந்த விசாரணையில் 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா..? என மீண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய […]
சுமார் 7,00,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று கொல்கத்தாவுக்கு வர உள்ளது. புனேவின் சீரம் நிறுவனத்தில் இருந்து இன்று பிற்பகலில் 7 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொல்கத்தாவுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் முதலில் கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத் துறையின் மத்திய கடைக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு இருந்து மாநிலம் முழுவதும் 941 கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படும். இன்றுவரை, மாநிலத்தில் 561,000 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 9,957 பேர் […]
இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில்,பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்சியில், தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துக்களை கூறுவார்கள்.மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர். தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா : ஓட்டுப்போடவும், அரசுப் பணியில் சேரவும் அனுமதிக்கப்படும் 18 வயது […]
காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள புதுமையான பெயிண்ட் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிமுகப்படுத்துகிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, விஷத் தன்மையற்ற வகையில் “காதி இயற்கை வர்ணம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெயிண்ட் , பூஞ்சைக்கும், நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் பெயிண்ட் ஆகும்.பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெயிண்ட் குறைந்த விலையில் இருப்பதுடன் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது. காதி இயற்கை வர்ணம் 2 விதங்களில் கிடைக்கின்றன- […]
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனிடையே, இன்று விசாணைக்கு வந்த இந்த வழக்கில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று க்ளெவி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை […]
பள்ளத்தில் சரிந்த லாரியை ஒரு ஊரே சேர்ந்து இழுத்த அதிசியம் நாகாலாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாகாலாந்தில் சரக்குகளுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பள்ளத்தில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அது மிகவும் ஆழமான பள்ளம் இல்லை. ட்ரைவர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பள்ளத்தில் சரிந்த லாரியை எப்படி மேல கொண்டு வரலாம், ஒரு கிரேனை கொண்டு வந்து மேல தூக்கலாம், இழுக்கலாம். ஆனால் அந்த இடத்துக்கு […]
கொரோனா காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி காகிதம் இல்லா வடிவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புத்தகம் வடிவில் இல்லாமல் இந்த முறை மென்பிரதி (Software) மூலம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் கூறப்படுகிறது. காகிதத்தை தொட வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் அறிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, 2021-22 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் அடுத்த மாதம் 1ஆம் தேதி கடந்த 100 ஆண்டுகளில் […]
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காணொலி மூலம் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு – சீரம் […]
மகாராஷ்டிராவின் பண்டாராவில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். மகாராஷ்டிராவின் பண்டாராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 10 குழந்தைகள் இறந்தனர் மற்றும் 7 பேர் மீட்கப்பட்டனர். மருத்துவமனையின் வெளிப்புற பிரிவில் அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது, பிற இடங்களில் பிறந்த குழந்தைகளுக்கானது, ஆனால் சிறப்பு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தீ விபத்தால் […]
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது.பின்னர் நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என […]
சத்தீஸ்கரின் ஜஷ்பூர் மாவட்டத்தில் யானை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக வன அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். மாநில தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதல்கான் வனப்பகுதில் நேற்று மாலை இந்த சம்பவங்கள் நடந்தது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அந்த வழியில் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும்,உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உடனடியாக ரூ .25,000 உதவி வழங்கப்பட்டது. .
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா நடக்கும் டெல்லியில் டிராக்டர் பேரணி நடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கப்படாவிட்டால், வரும் ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி தேசியக்கொடியுடன் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், இன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க […]
குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கல்லூரிகள் குஜராத்தில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம், மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுழையும் அனைவருக்கும் சோதனை […]
உத்தரகண்ட்: ரிஷிகேஷ் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தன. எய்ம்ஸ், ரிஷிகேஷ் வளாகத்தில் இருபத்தி எட்டு காகங்கள் மற்றும் ஒரு புறா இறந்து கிடந்தன. மேலும், ஒரு சில பறவைகள் பீஸ் பிகா வட்டாரத்தில் இருந்தும், இரண்டு ரைவாலா நிலையத்திலிருந்தும் இறந்துள்ளதாக அரசு கால்நடை அதிகாரி ராஜேஷ் ரதுரி தெரிவித்தார். இந்நிலையில், உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கைகளுக்காக வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரணம் குறித்து ரிஷிகேஷ் மாவட்ட […]
மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால் […]
ஒடிசாவில் பள்ளிக்கு சென்ற 26 ஆசிரியர்கள் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது என தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் அரசு தீவிரம்காட்டி வருகிறது. இதனுடன் கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால், பெற்றோரிடம் கருத்து கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுப்பதாக கூறப்படு வருகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 […]
டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.நோய் மேலும் பரவாமல் தடுக்க […]