#BREAKING: சட்டத்தை நிறுத்தி வைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு – உச்சநீதிமன்றம்..!

We have the power to set up a committee to uphold the law and no one can stop the committee appointed by the Supreme Court.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியாது என மத்திய அரசு கூறி நிலையில்,இன்று நடந்த விசாரணையில் 3 வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா..?  என மீண்டும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசின் கேட்டு செல்லுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தை நிறுத்தி வைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு , உச்சநீதிமன்றம் நியமிக்கும் குழுவை யாரும் தடுக்க முடியாது. நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவில் விவசாய நிலங்கள் பாதுகாக்க உறுதி செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா..? என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் கூறியது. வேளாண் சட்டங்கள் நல்லது என்று ஒருவர் கூட வழக்கு தொடரவில்லை, புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.