#FarmersBill: நாளை உத்தரவு – உச்சநீதிமன்றம் அறிவிப்பு.!

The Supreme Court has said it will issue an order tomorrow in cases against agricultural laws brought by the federal government.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகளில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இதனிடையே, இன்று விசாணைக்கு வந்த இந்த வழக்கில், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று க்ளெவி எழுப்பியதை தொடர்ந்து, வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்கள் நல்லது என்று ஒருவர் கூட வழக்கு பதியவில்லை. சிலர் தற்கொலை செய்கிறார்கள், வயதானோர், பெண்கள் போராடுகின்றனர், என்னதான் நடக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிருந்தனர். புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.