1 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் – மத்திய அரசு

Covshield and Bharat Biotech, co-producers of Oxford Serum, have been approved by the Drug Control Commission of India

ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது.பின்னர் நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது, சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருககிறார்.