பைக்கில் சென்றபோது காதலனை குத்தி கொன்ற காதலி..!

who was behind the bike, stabbed Dattaji in the back with a knife he had hidden. Bhavani stabbed Dattaji in several places with a knife

ஆந்திர மாநிலத்தை சார்ந்த பவானி, இவர் தத்தாஜி என்ற இளைஞரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தத்தாஜியிடம் பவானி தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தத்தாஜி திருமணம் செய்துமறுத்து வந்துள்ளார்.

இதனால், வேறு ஒரு பெண்ணுடன் தத்தாஜிக்கு தொடர்பு இருக்கலாம் என பவானிக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால், தத்தாஜியை சந்திக்க வேண்டும் என கூறி அவரை அழைத்துள்ளார். தத்தாஜி உடன் பவானி பல இடங்களுக்கு பைக்கில் ஊர் சுற்றி உள்ளனர். பின்னர், பவானி மீண்டும் தனது வீட்டில் விடச்சொல்லி உள்ளார். தத்தாஜூம் பவானியை பைக்கில் அழைத்து கொண்டு சென்றுள்ளார்.

அப்போது பைக்கின் பின்னால் இருந்த பவானி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தத்தாஜியின் முதுகில் குத்தினார். தடுமாறி கீழே விழுந்த தத்தாஜி மீது பல இடங்களிலும் கொடூரமாக கத்தியால் பவானி குத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தத்தாஜியின் தாய்க்கு பவானி போன் செய்து உனது மகனை கொன்றுவிட்டேன், உடலை வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். சம்பவ இடத்திலேயே தத்தாஜி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.