#BREAKING: டெல்லி போராட்டத்தில் பிரிவினைவாதிகள் ஊடுருவலா..? – மத்திய அரசு..!

The federal government said separatists, including Khalistan, had infiltrated the farmers' struggle during today's hearing.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும்  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் ஊடுருவியுள்ளனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி காலிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாதிகள் ஊடுருவல் என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளதா..? ஏதேனும் ஆதாரங்களை வைத்து இருக்கிறீர்களா..? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு நிச்சயம் முடியும் உளவுத்துறை அறிக்கை பிரமாண பத்திரங்களை நாளை தாக்கல் செய்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#BREAKING: டெல்லி போராட்டத்தில் பிரிவினைவாதிகள் ஊடுருவலா..? – மத்திய அரசு..!